சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 36 பேருக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு. இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதி. போலீசார் விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அரசு தாய்சேய் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கர்ப்பிணிகள் வார்டில சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்றவர்களுக்கு மருத்துவர்கள் ஊசி போட்ட பிறகு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தன் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த மருத்துவர்கள் நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு மாற்று மருந்து கொடுத்தனர் சிறிது நேரம் கழித்து 30-க்கும் மேற்பட்டோர் உடல்நிலை சீரான நிலையில் 2க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் மகப்பேறு சிகிச்சைக்காக வந்திருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பதற்றம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பாக சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
