ஐந்தாண்டு காலமாக வடிகால் வாய்க்கால் தூர்வாராததன் காரணமாக திருவாரூர் அருகே 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் – விவசாயிகள் வேதனை..
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக திருவாரூர் அருகே காவனூர், பாய்ச்சல் கடை, சூரனூர், கருப்பூர், நட்டுவாக்குடி, கருப்பூர், சத்தியவாடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு 30 நாட்களேயான சம்பா தாளடி பயிர்கள் நீரில் முழுவதுமாக மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மழை நின்ற பிறகும் இந்த பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி இருக்கிறது. இதனால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 30 நாட்களேயான பயிர்கள் சேதமடைந்தன. இந்த பகுதியில் செல்லும் காவனூர் வடிகால், பாய்ச்சகாடி வடிகால் ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளாக தூர்வாராததன் காரணமாக தண்ணீர் காட்டாற்றில் செல்வது தடைப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக தூர்வாரி தண்ணீரை வடிவமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பேட்டி: பாரதி மற்றும் மாதவன் விவசாயிகள்
