மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து தாக்கிய போதை ஆசாமிகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைப்பு
காரைக்கால் மாவட்டம் பூவம் அருகே உள்ள தனியார் பள்ளி பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரசலங்குடி அருகே மாங்குடி பகுதியில் நேற்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்ற போது, மது போதை ஆசாமிகள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தி அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக
மூன்று பேர் மீது பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், எடுத்துக்கட்டி கிராமத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன் என்ற 23 வயது இளைஞரை பொறையார் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, பொறையார் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் காவல் உதவியாளர் அறிவழகன் ஆகிய மூவர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
