சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த மூன்று பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வயல் பகுதியில் வனச்சரக அலுவலர் ஆயூப்கான் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்,புத்தூரை சேர்ந்த ஹாஜா நஜீமுதின்,தொக்கலாக்குடியை சேர்ந்த சார்லஸ் ஆகிய மூன்று பேரும் தடைசெய்யப்பட்ட மடையான் பறவையை பிடித்து கொண்டிருந்தனர் அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.மேலும் மூன்று நபர்களுக்கும் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சீர்காழி வனத்துறை சார்பில் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வேட்டைக்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
