மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி மாங்கனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தஸ்லீம். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.கடந்த மாதம் 1 ஆம் தேதி வீட்டில் அவரது மனைவி ஜாஸ்மின் அருகில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களது வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருப்பவரும் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். காலை ஜாஸ்மின் வீட்டிற்கு வந்தபோது கதவுகள் அனைத்தும் பூட்டி இருக்க வீட்டின் அறையில் இருந்த நான்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 75 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் மாடியில் உள்ள வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு எதுவும் கிடைக்காத நிலையில் வீட்டின் உள்பக்கம் அமைந்துள்ள படிக்கட்டு வழி வழியாக ஜாஸ்மின் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் ஆணைக்காரன் சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தனிப்படைகள் அமைத்தும் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் குற்றவாளிகளான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிழேந்தி, புதுப்பட்டினத்தைச் சேர்ந்த சேதுபதி, திவாகர் ஆகிய மூவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 15.5 சவரன் தங்க நகை ரூபாய் 7 லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


















