2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமது கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று மனுவை நேரடியாக வழங்கினர்.
இதில், பொதுச் சின்னத்துக்கான 10 விருப்பச் சின்னங்களின் பட்டியலுடன், அவற்றின் படங்களும் இணைத்து சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தவெக தற்போது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, மாநிலக் கட்சி அந்தஸ்து பெறும் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
234 தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அதனால் கட்சிக்கு பொதுச் சின்னம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

















