மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(42) என்பவர் 16 வயது சிறுமிக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதன் பேரில் சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தச் சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திகேயனை மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இந்தநிலையில் ஆசிரியர் கார்த்திகேயன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், ஆசிரியர் கார்த்திகேயனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி, போக்சோ கார்த்திகேயனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version