மயிலாடுதுறையில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154-வது ஆண்டு பிறந்தநாள் பெருவிழா தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது:-
மயிலாடுதுறையில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154-வது ஆண்டு பிறந்தநாள் பெருவிழா தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், கிட்டப்பா அங்காடி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட வ.உ.சி. திருவுருவப்படத்துக்கு மாநில தலைவர் பண்ணை தி.சொக்கலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாக சென்று தனியார் திருமணக்கூடத்தில் விழா நடைபெற்றது.
இதில் வ.உ.சியின் பெயர்த்தி வ.உ.சி. வா.மரகதமீனாட்சிராஜா, தானாபதி பிள்ளை வம்சாவழியை சேர்ந்த பொன்னு பிள்ளை மற்றும் அவரது மகன் ஞானராஜன், உப்பு சத்தியாகிரக தியாகி சர்தார் வேதரத்தினம் பிள்ளை வம்சாவழியை சேர்ந்த வேதரத்தினம் பிள்ளை, மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வ.உ.சிதம்பரனார் திருவுருவச்சிலையை தமிழக அரசு நிறுவ வேண்டும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விரைவில் அமைய உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு வ.உ.சி. பெயரை சூட்ட வேண்டும், சைவ வேளாளர்களுக்கு 2 சதவீத இட உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், 1967-ஆம் ஆண்டுமுதல் சைவ வேளாளர் சங்கம் திமுகவை தொடர்ந்து ஆதரித்து வரும் நிலையில், அவர்களுக்கு எந்த விதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை, இனியும் வழங்கப்படவில்லை என்றால் போராட வேண்டிய நிலை ஏற்படும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வுpழாவில், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆதரவற்றோருக்கு மருத்துவ உதவி வழங்கவும், வயது முதிர்ந்த ஏழை மக்களின் வாரிசுகளுக்கு கல்வி, திருமண உதவி மற்றும் பேரிடர் காலங்கில் முன்வந்து உதவும் நோக்கில் சைவம் நல அறக்கட்டளை என்ற அறக்கட்டளை புதிதாக தோற்றுவிக்கப்பட்டது
