14 ஆம்புலன்ஸ்கள், 58 மருத்துவர்கள்.. விஜய் ஈரோடு பரப்புரைக்கு மாஸ் ஏற்பாடு !

ஈரோடு :
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை ஈரோட்டில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்க உள்ளதை கருத்தில் கொண்டு, 14 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளதாகவும், 58 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அவசர மருத்துவ சேவைகள் உடனடியாக வழங்கும் வகையில் மருத்துவ மையங்களும் அமைக்கப்பட உள்ளன என தெரிவித்தார்.

விஜயின் ஈரோடு பிரச்சாரம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முக்கியமானதாக பார்க்கப்படும் நிலையில், கூட்டத்தை ஒழுங்குபடுத்த அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

Exit mobile version