மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை அருகே தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13 ஆம் ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா ; ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு காவடி எடுத்தும் வழிபாடு :- பக்தர்கள் அருள்வந்து ஆடியது பொதுமக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் தத்தங்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேண்டுவொருக்கு வேண்டும் வரம் தரும் ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 4 ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பந்தல்கால் முகூர்த்தத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் காவடி திருவிழாவான இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி தத்தங்குடி விநாயகர் ஆலயத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் சக்தி கரகம் மற்றும் காப்பு கட்டி விரதம் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு காவடி எடுத்தும் மேளதாள வாத்தியங்கள் முழங்க காளி பச்சை காளி பவளகாளி சிகப்பு காளி நடனம் மற்றும் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். இதனை அடுத்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்தும் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் அருள் வந்து ஆடியது அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இத் திருவிழாவில் தத்தங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Exit mobile version