அரியலூர் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சி ஓ ஐ டி யு சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்ட சிறுமி
அக்டோபர் 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு ஆனது கடந்த நான்கு ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை உயர்த்தி வழங்காதது, ஊதிய உயர்வு தொடர்பான வழக்கு தொழிலாளர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கும்போதே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 16 சதவீதத்திற்கு குறைவாக ஊதியம் உயர்வு வழங்கக் கூடாது.
என்ற தமிழக அரசு தொழிற்சங்கம் நிர்வாகம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை மீறி இஎம்ஆர் ஐ ,ஜி எச் எஸ் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு செய்து ஊதிய உயர்வை குறைத்து வழங்கியுள்ளதை கண்டித்தும் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறுமி ஒருவர் 108 ஆம்புலன்ஸ் சங்கத்தினர் கோசமிட்டதையடுத்து சிறுமியும் தங்களது பெற்றோர்களுக்காக தாமும் சேர்ந்து கோஷமிட்டது வேதனையை ஏற்படுத்தியதுடன் பாதசாரிகள் வியந்து பார்த்த வண்ணம் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
