திருத்துறைப்பூண்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 103 வது பிறந்த நாள் விழா திமுக நகர சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு நகர திமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் அதனைத் தொடர்ந்து முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டது
தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கலைஞரின் திருவுருவப்படத்திற்கு தொமுச தொழிற்சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்
இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
