மயிலாடுதுறை அருகே வாகன சோதனையில் சிக்கிய 100 கிஃப்ட் பாக்ஸ்த னியார் சிமென்ட் நிறுவனம் ஆவணம் இன்றி கொண்டுவந்த பொருட்கள் பறிமுதல்:-
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணம் வழங்குவதை தடுப்பதற்காக 9 பறக்கும்படைக்குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி பகுதியில் தனி வட்டாட்சியர் மகேஸ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரில் கிஃப்ட் பாக்ஸ் அடங்கிய பெட்டிகள் இருந்தது, அவற்றிக்கு முறையான ஆவணம் இல்லை, தனியார் சிமென்ட் நிறுவனம் கொத்தனார்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்குவதற்காக எடுத்து வந்ததாக காரை ஓட்டி வந்த கந்தர்வகோட்டை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தெரிவித்தார்.
பரிசுப் பொருட்கள் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. , வணிகவரித்துறை அதிகாரி சரண்ராஜ் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டார், முறையான ஆவணம் இன்றி ரூ.14,670 மதிப்புள்ள 100 பரிசுப் பெட்டிகள் கொண்டுவந்து விநியோகம் செய்வது தேர்தல் நடத்தைவிதிமீறல் என்றும் முறையான ஆவணத்தைக் கொண்டுவந்து காட்டியும் அபராதம் செலுத்திவிட்டு பொருட்களை பெற்றுச் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
