திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதியில் வார்டு சபை கூட்டம் வார்டு கவுன்சிலர் தாமஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்தியால்பேட்டை, ஜெயநகர், கண்ணதாசன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர் இந்த வார்டு பகுதியில் உள்ள பூங்கா மற்றும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது, மழைநீர் கால்வாய் சீரமைப்பது, நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது, குறிப்பாக நகர பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை கொண்டுவருவது, வீடுகள் தோறும் மக்கும்- மக்காத குப்பைஎன தரம் பிரித்து தூய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
