மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்  பெயர் மாற்றத்தை கண்டித்து 100 நாள் வேலை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பெயர் மாற்றத்தை கண்டித்து 100 நாள் வேலை ஆட்களை சந்தித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதித் திட்​டத்​தின் பெயரை
விபி- ஜி ராம் ஜி என ஒன்றிய அரசு
மாற்றியுள்ளது,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.
செல்வப் பெருந்தகை தொடர் போராட்டம் அறிவித்திருந்தார்,

இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை வி பி ஜி ராம் ஜி என்ற மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில்
100 நாள் பணியாளர்களை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சசிகுமார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் சந்தித்து பெயர் மாற்றம் செய்தது தொடர்பாகவும்

அதனால் வருங்காலங்களில் 100 நாள் வேலை இல்லாமல் போகும் சூழல் உருவாகக்கூடும் என்பதை 100 பணியாளர்களிடம் எடுத்துக் கூறி ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடம்பத்தூர் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் N.D.சதிஷ் ,மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் சி.திவாகர்,மாவட்ட செயலாளர் பண்ணூர் M- இருதயராஜ்
வழக்கறிஞர் ஸ்ரீதர்,மகிளா காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் K.லலிதா குப்பன்
பண்ணூர் பாலசாமி ,பொதுச்செயலாளர் M.குப்பன்,மாவட்ட பொதுச்செயலாளர் M.P.கோகுல் A.மூவேந்தன், R.லோகேஷ்,k.விஸ்வநாத்,k. மகா S.அருண் G.ஆனந்த்

Exit mobile version