மயிலாடுதுறை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளில் பிளாஸ்டோபாரீஸ் ரசாயன பவுடர் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்:-
மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் பகுதியில் உள்ள கலைக்கூடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இங்கு நேற்று ஆர்டிஓ விஷ்ணுபிரியா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டோபாரீஸ் என்ற ரசாயன பவுடர் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டிருப்பதை அறிந்து அந்த கலைக்கூடத்தை பூட்டி சீல் வைத்தனர். தகவல் அறிந்த பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில்பாலு மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் நோக்கில் அரசு அதிகாரிகள் செயல்படுவதாகவும் முன்கூட்டியே ஆய்வு செய்யாமல் விழாவிற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்துள்ளனர். அனைத்து சிலைகளும் ரசாயனம் பயன்படுத்தவில்லை அனைத்து சிலைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம்சாட்டி கலெக்டரிடம் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து வட்டாட்சியர் சுகுமாறன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் விநாயகர் சிலை தயாரிப்பு மையத்தின் சீலை அகற்ற ஆய்வு செய்தனர். அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளில் 10 சிலைகள் மட்டும் பிளாஸ்டோபாரீஸ் ரசாயன பவுடர் பயன்படுத்தியதை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அந்த சிலைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மையத்தில் ஆர்டர் செய்தவர்கள் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பணிகளை தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
















