வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பருத்தி செடிகளில் சப்பாத்தி பூச்சியின் தாக்கம் அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை பருத்திக்கு உரிய விலை வழங்க அரசுக்கு கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் சுமார் 10 ஏக்கருக்கு மேல் கோடை பயிரான பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து தற்போது முதல் போகம் அறுவடை செய்து வருகின்றனர்.கடந்த மாதம் விட்டு விட்டு பெய்த மழையால் பருத்தி காய்கள் கொட்டிய நிலையில் தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால் வைத்தீஸ்வரன் கோவில், செங்கமேடு,மருவத்தூர்,புங்கனூர், கற்கோயில்,தொழுதூர்,எடக்குடி வடபாதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி செடிகளில் சப்பாத்தி பூச்சிகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது.பருத்திக்கு போதிய விலை இல்லாத நேரத்தில் இந்த நோய் தாக்குதலுக்கு கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறும் விவசாயிகள் பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
