விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணை கட்டிக்கொண்டு நகராட்சி ஆணையரின் இல்லத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
விழுப்புரம் நகராட்சி 19வது வார்டில் பாதாள சாக்கடை பணிகள் சரிவர நடைபெறவில்லை எனக் கூறி, 19வது வார்டின் கவுன்சிலர் வசந்தா அன்பரசு அதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதாள சாக்கடை துப்புரவுக்குறைவால் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என தெரிவித்த அவர், பணியை உரிய முறையில் செய்யாத ஒப்பந்ததாரரை நகராட்சி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், நகராட்சி ஆணையர் வசந்தா வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து, வாயில் கருப்பு துணி கட்டி, “நகராட்சி நிர்வாகம் திமுக நல்லாட்சிக்கு கலங்காரம் ஏற்படுத்துகிறது” எனக் கண்டனப் போஸ்டரை கையில் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நகராட்சி கவுன்சிலர் நகராட்சி ஆணையரின் இல்லம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது