மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மற்றும் தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து முகாமில் பொது சுகாதாரம் மற்றும் இருதயம், கண், பல், சக்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளிட்ட 17 வகையான நோய்களுக்கு சிறப்பு மருத்துவர் நிபுணர்கள் மூலம் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் திருமுல்லைவாசல், தாழந்தொண்டி, வழுதலைக்குடி, ராதாநல்லூர் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர். முகாமில் கொள்ளிடம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், திமுக ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், மலர்விழி, பஞ்சு குமார், நகர செயலாளர் சுப்பராயன், ஒப்பந்ததாரர் சின்னப்பா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அங்கு தன், பூவரசன்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்