மயிலாடுதுறை நகரில் உள்ள ஸ்ரீ மகா வீரமாகாளியம்மன் ஆலய 125 ஆம் ஆண்டு பால்குட திருவிழா; நகரம் முழுவதும் வான வேடிக்கைகள் முழங்க சிவன் , பார்வதி மற்றும் பச்சைக்காளி நடனங்களுடன் ஊர்வலமாக ஆலயத்திற்கு வருகை தந்து பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர் :-
மயிலாடுதுறை நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா வீரமா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆடி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு 125 ஆம் ஆண்டு பால்குடம் மற்றும் காவடி உற்சவம் இன்று விமர்சையாக நடைபெற்றது. காவேரி துலா கட்ட கரையில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு சிறப்பு பூஜைகளுடன் மேள வாத்தியங்கள் முழங்க ஏராளமானோர் பால்குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக பச்சைக்காளி , பவளக்காளி மற்றும் சிவன் , பார்வதி மேடம் அணிந்து கலைஞர்கள் நடனமாடியபடி வீதி உலாவாக வந்தது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. பின்னர் 12 அடி அலகு குத்தியும் , கூண்டு காவடிகள் எடுத்தும் பக்தர்கள் ஆலயத்தை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அங்கு கண்கவர் மற்றும் விண்ணைமுட்டும் வான வேடிக்கைகள் பக்தர்களை கவர்ந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்