மயிலாடுதுறையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பாஜகவினர் பல்வேறு யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் உள்ள காஞ்சி சங்கரா வித்யாலயா பள்ளியில் பாஜகவினர் யோகா பயிற்சியை இன்று மேற்கொண்டனர் .

தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தொடர்ந்து சூரிய நமஸ்காரம் , திரிகோணாசனம் , மூச்சுப் பயிற்சி மற்றும் பத்து நிமிட தியானம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டு யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Exit mobile version