போதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகள் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து தலைமையேற்கிறார், இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதை இல்லா தமிழ் நாடு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு அப்பள்ளியில் ஆன்ட்டி டிரக் கிளப்பை தொடங்கிவைத்து துணைமுதமைச்சருடன் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து போதை பொருள் தடுபில் சிறப்பாக பணியாற்றிய பள்ளிகளுக்கு சான்றுளையும்,பதக்கங்களையும் அமைச்சர் நாசர் வழங்கினார்.பள்ளி மாணவ,மாணவியரின் போதை எதிர்ப்பு நாடகம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதாப்,சட்ட மன்ற உறுபினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், கோவிந்தராஜன்,துரைசந்திர சேகர் காவல் கண்கணிப்பளர் விவேகனந்த சுக்லா உள்ளிட்ட அரசு அலுவலர்களும்,ஆசிரியர்களும்,ஏறாளமான மாணவ,மாணவியரும் கலந்து கொண்டனர்.