மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவில் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்தரின் தலைமையிலான போலீசார் திருமுல்லை வாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியே வந்த சொகுசு காரை சோதனை செய்ததில் புதுபட்டிணத்தை சேர்ந்த சண்முகம் முன்னுக்கே பின் முரணாக பேசினார் சந்தேமடைந்த போலிசார் காரை சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை அறிந்த போலீசார் அவரிடம் திவிர விசாரணை மேற்கொண்டதில் மேலும் இரண்டு கார்களில் மதுபானங்கள் கடத்தி வருவதை அறிந்த சீர்காழி போலீசார் எடமணல் மற்றும் தமிழக எல்லை பகுதியில் இரண்டு சொகுசு கார்களுடன் காரைக்காலை சேர்ந்த முஜிபுர் ரகுமான்,சுபாஷ்,சுகுமார், பிரபாகரன்,முருகன் உள்ளிட்ட ஐந்து பேரை மது பானங்களுடன் கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.20 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்கள்,இருசக்கர வாகனம் மற்றும் 1500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
