மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சிக்கு உட்பட்ட புளியந்துரை கிராமத்தில் சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை நேரடி பேருந்து சேவை பெறாத கிராமத்திற்கு முதல்முறையாக நேரடி பேருந்து சேவையை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு துணை மேலாளர் (வணிகம்) சிதம்பர குமார் தலைமை தாங்கினார். சீர்காழி நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரபாகரன், தொழிற்சங்க தலைவர் சின்னத்துரை, கிளை மேலாளர் செல்வகணபதி நிகழ்ச்சியில் சீர்காழியிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் பெறும் வகையில் புளியந்துரை வழியாக புதுப்பட்டினம் வரை செல்லும் புதிய பேருந்து சேவை பன்னீர்செல்வம் எம்எல்ஏ இன்று துவங்கி வைத்தார்.