புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் நான்தான் முதல்வர் என்கிறார்:இன்னொருவர் தனது குடும்பத்தை ஒருங்கிணைக்க முடியாதவர் அன்புமணி ராமதாஸ் முதல்வரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லாதவர் :விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் பேச்சு
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மத்திய மாவட்டம் பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் மாலிக் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார் பின்னர் இந்த ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.லட்சுமணன் பேசுகையில்:தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி ஒரு நடிகர் நான் தான் முதவர் என்று சொள்ளிவருவதாகவும் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை பற்றிசி பேச எந்த தகுதியும் இல்லை என்றும் மேலும் பாமக தலைவர் அன்புமணி தனது குடும்பத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியாதவர் பல்வேறு கதைகளை பேசிக்கொண்டு நம்முடைய முதல்வரை விமர்சனம் செய்து வருகிறார்கள் அவர்கள் எல்லாம் எந்த தகுதியும் இல்லை என்று பேசினார்.கலைஞர் பல அடக்கு முறைகளை சந்தித்து சிறையில் இருந்து மக்கள் பணி ஆர்ரியவர் இன்று அவர்களைப்பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் எந்த தகுதியும் இல்லை என்று பேசினார்.