தமிழகத்தில் நிதிநிலை மோசமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்தையும் செய்து கொடுத்து எதிர்நீச்சல் போட்டு தமிழக முதலமைச்சர் சாதித்து வருகிறார்:- மயிலாடுதுறை அருகே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பேச்சு :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி கிராமத்தில் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, சங்கரன்பந்தல் ஊராட்சியில் ரூ78.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டில் பணிகளை துவங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில் கடந்த ஆட்சி காலத்தில் மருத்துவர்கள் தேர்வு என்பது எம்ஆர்பி தேர்வு முறை மூலம் பல்வேறு மாவட்டங்களில் பணி அமர்த்தப்படுவார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மருத்துவர்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே பணியாற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டுதலாக உள்ளது. 100 நாள் வேலை பார்க்கும் பெண்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக மத்திய அரசு சம்பளம் வழங்காமல் வஞ்சித்து வருகிறது. நிதிநிலை மோசமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்தையும் செய்து கொடுத்து எதிர்நீச்சல் போட்டு தமிழக முதலமைச்சர் சாதித்து உள்ளார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

