பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்; பிரசன்ன மாரியம்மன் கோவிலில் அவரது பெயரில் அர்ச்சனை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி பாமகவினர் வழிபாடு:-

பசுமை தாயகம் நாள் விழா மற்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 87-வது பிறந்தநாள் விழா அக்கட்சியினரால் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டப்பட்டது. பாமக (மருத்துவர் ராமதாஸ் அணி) மாவட்ட செயலாளர் பாக்கம்.சக்திவேல் தலைமையில் மயிலாடுதுறை வண்டிகாரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டி அவரது பெயரில் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து, கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதில், வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயரான், மகளிர் சங்க மாநில செயலாளர் தேவி குரு செந்தில், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மகளிரணி மாவட்ட செயலாளர் ரேவதி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Exit mobile version