மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் பாமகவின் 37 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அன்புமணி ராமதாஸ் அணி சார்பில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 37 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பாமகவினர் பல்வேறு இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் செம்பனார்கோவில் கடைவீதியில் அன்புமணி ராமதாஸ் அணி சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாபு(எ) ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி கலந்து கொண்டு கட்சி சாதனைகள் , போராட்டங்கள் குறித்த சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாக கோஷங்களை எழுப்பி பட்டாசு வெடித்தும் கொண்ட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து வருகின்ற 20 ஆம் தேதி விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் 10.5 சதவீதம் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பி.கே.தமிழ், மாவட்ட துணை தலைவர் பாலு மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.