நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய மருத்துவ ஆய்வு ஆய்வு குழுவினர் மருத்துவமனையின் தரம் சிகிச்சை முறைகள் நிதி பயன்பாடு, அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என நேரில் விசாரணை செய்து ஆய்வு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு மகப்பேறு, நரம்பியல், எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பிரிவுகளில் தினமும் அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.
இந்த மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்து ஆய்வு செய்ய, தேசிய மருத்துவ ஆய்வுக் குழுவினர் இன்று வருகை தந்தனர். அக்குழுவினர் ஒவ்வொரு துறையிலும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டனர். வெளி நோயாளிகள் பிரிவு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், மகளிர் நலப் பிரிவு, ரத்தப் பரிசோதனை போன்ற பிரிவுகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். மருத்துவமனையின் தரம், சிகிச்சை முறைகள், நிதி பயன்பாடு, அரசு நலத்திட்டங்கள் முறையாகச் சென்றடைதல் போன்ற பல அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது கல்லூரி முதல்வர் லியோ டேவிட், உறைவிட மருத்துவ அதிகாரி விஜயலட்சுமி உதவி உறைவிட மருத்துவ அதிகாரி ரெனிமோள் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர். முன்னதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் பணியாளர்கள் தங்களுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என ஆய்வுக்கு வந்த குழுவினரிடம் புகார் தெரிவித்தனர் இதை அடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய குழுவினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்
