திருக்கருகாவூரில் மயான சுற்றுச்சுவரை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய கிராம மக்கள் காத்திருப்புப்போராட்டம்

ர்காழி அருகே திருக்கருகாவூரில் மயான சுற்றுச்சுவரை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திருக்கருகாவூர் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருக்கருகாவூர் கிராமத்தில் பொது மயானத்துக்கு சுற்றுச்சுவர் மற்றும் எரிமேடை அமைக்க நடைபெற்று வந்த பணி, இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை சிலர் திங்கள்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து மயான சுவற்றை இடித்து சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் உள்பட கிராம மக்கள் 100 பேர் இன்று காலை முதல் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு 7.45 மணியைக் கடந்தும் நீடித்துவருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Exit mobile version