தளபதி உயிர் நண்பருடன் – உலகிலேயே முதன்முறையாக துபாயில் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் UAE பொருப்பாளர் திரு. கார்த்திகேயன் தலைமையில், தளபதி விஜய் அவர்களின் 51வது பிறந்த நாள் விழா ஜூன் 15 அன்று துபாயில் உலகிலேயே முதன்முறையாக வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் மிகப்பெரிய சிறப்பு – தளபதியின் உயிர் நண்பர் நடிகர் சஞ்சீவ் வெங்கட் அவர்கள் நிகழ்வில் பங்கேற்று, லியோ திரைப்படத்துடன் ரசிகர்களுடன் கேக் வெட்டி, மேளதாளங்களுடன் ஆட்டம் ஆடி கொண்டாடினார்!

இந்நிகழ்வில் துபாயில் வசிக்கும் TVK நிர்வாகிகள், தமிழ் மக்கள் மற்றும் தளபதியின் குட்டி ரசிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தளபதி பிறந்த நாள் நிகழ்வை சிறப்பித்து மகிழ்ந்தனர்.

Exit mobile version