மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீப்பந்தம் கையிலேந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு,
தீப்பந்தம் கையிலேந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும் கண்டன உரையாற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
