தமிழக அரசின் பல்வேறு சேவைகள் அனைத்தும் மக்களையும் நேரடியாக சென்றடைய வளவனூர் மற்றும் கோண்டூர் பகுதிகளில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
அரசின் பல்வேறு சேவைகள் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றுதல், வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டிட மனை பிரிவு வரைபடத் திட்டம், வேலையில்லா இளைஞருக்கு வேலைவாய்ப்பு திட்டம், ஆதார் அட்டை வழங்குதல் ,பெயர் சேர்த்தல் நீக்குதல், மருத்துவ முகாம், உள்ளிட்ட 15 துறை சார்ந்த 46 திட்டங்களுக்கு மக்களை தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை பொதுமக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் விழுப்புரம்
மத்திய ஒன்றியம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளவனூர் பேரூராட்சியில் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய கோண்டூர் பகுதியில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டு மனு பெற்றார் இந்நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ் கோலியனூர் ஒன்றிய பெருந்தலைவர் சச்சிதானந்தம் கண்டமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் வாசன் வளவனூர் பேரூராட்சி செயலாளர் ஜீவா பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள். வார்ட்டு உறுப்பினர்கள் , கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்


