சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்பு
சுசீந்திர தாணுமாலய சுவாமி கோவிலில் நிறைப்புத்தரிசி பூஜை இன்று அதிகாலை நடைபெற்றது. இதற்காக அதிகாலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டு கட்டாக கட்டப்பட்டு, தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது
.பின்னர் ரத வீதியை சுற்றி வந்து கோவிலின் உள்ளே எடுத்து வரப்பட்டது. நெற்கதிர்கள் தாணுமாலயன் சுவாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் கோவில் உட்பிரகாரங்களில் உள்ள தெய்வங்களுக்கும் நெற்கதிர்கள் படைக்கப்பட்டன. அதன் பிறகு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதை அடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டன அவற்றை வரிசையில் நின்று பக்தர்கள் பெற்றுக் கொண்டனர்
இந்த நெற்கதிர்களை பக்தர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நெற்கதிர்களை வீட்டின் முன்பு தொங்க விடுவார்கள். இதன் மூலம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் மகிழ்ச்சி நிலைக்கும் என்பது ஐதீகம். இந்த நெல்மணிகளை வயலில் தூவினால் அந்த போகம் முழுவதும் செழித்து லாபம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.