மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேட்டிலில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையே ஆன மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி மாவட்ட ஹாக்கி செயலாளர் சசிகுமார் தலைமையில் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது.இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக போட்டியினை பெஸ்ட் கல்வி குழும தாளாளர் ராஜ்கமல் தொடங்கி வைத்தார்,இதில் இறுதிப் போட்டியில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி – சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி இறுதிப்போட்டி விளையாடினர் 3-1 கணக்கில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மூன்றாவது இடம் பெஸ்ட் மெட்ரிக் பள்ளி, நான்காம் இடம் நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி இடம் பிடித்து உள்ளது. வெற்றி பெற்ற அணி திருச்சியில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மனித வேல மேம்பாட்டு ஆலோசகர் பாபு நேசன், சபாநாயகர் முதலியார் இந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
