சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை 7 நாட்களுக்கு போலீசார் கஸ்டடி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12-ஆம் தேதி 8 வயது பள்ளி சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த போலீசார் 13 நாட்களுக்கு பிறகு ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் பிஸ்வகர்மா என்ற குற்றவாளியை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி போலீசார் குற்றவாளியான பிஸ்வகர்மாவை 7 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நேற்று போக்சோ நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதனால் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஜீவ் பிஸ்வகர்மாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு ஆஜர் படுத்துவதர்காக அழைத்து வந்து வந்தனர். இதனால் நீதிமன்றம் முன்பாக துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் போலீசார் இந்த குற்றவாளியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க 7 நாட்கள் கேட்ட நிலையில் நீதிமன்றம் 4 நாட்களுக்கு விசாரிக்க அனுமதி வழங்கி இருக்கிறது. மேலும் விசாரணை முடிந்து பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து குற்றவாளியை விசாரணைக்கு கும்மிடிப்பூண்டி போலீசார் அழைத்து சென்று போது அங்கு வந்த வழக்கறிஞர்கள் திடீரென குற்றவாளியை சூழ்ந்து தாக்க முயன்றதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version