மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கூடுதலாக மேலும் மேலும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதால் கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் மற்றும் திட்டு பகுதி கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் போலீசார் அரசின் கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று ஒலிபெருக்கி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் ராஜா கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வர உள்ளதால் திட்டுப்பகுதியில் உள்ள கால்நடைகளை முன்னெச்சரிக்கையாக ஓட்டி மேடான பகுதிக்கு கொண்டு வர வேண்டும். தாழ்வான பகுதியில் உள்ள அனைவரும் அனைத்து உடைமைகளுடன் மேடான பகுதிக்கு வந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தார்.
