மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அமைந்துள்ளது. இங்கு அடிகளாரின் 85 ஆவது அவதார திருநாளினை முன்னிட்டு 19 ஆம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. இதனை அடுத்து விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குத்தாலம் கடைவீதியில் அமைந்துள்ள மன்மதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து கஞ்சி கலயத்தை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். வழி நெடுவிலும் பக்தர்கள் ஓம் சக்தி என கோஷமிட்டபடியும் , பெண்கள் சுவாமி அருள் வந்து ஆடியும் பேரணியாக சென்றனர். தொடர்ந்து வழிபாட்டு மன்றத்தை அடைந்து அங்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். ஆதிபராசக்தி மன்றம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.
குத்தாலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்
-
By Satheesa

- Categories: News
- Tags: district newstamilnadu
Related Content
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
By
Satheesa
April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி
By
Satheesa
April 30, 2026
வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்
By
Satheesa
April 30, 2026
பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா
By
Satheesa
April 30, 2026