மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அமைந்துள்ளது. இங்கு அடிகளாரின் 85 ஆவது அவதார திருநாளினை முன்னிட்டு 19 ஆம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. இதனை அடுத்து விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குத்தாலம் கடைவீதியில் அமைந்துள்ள மன்மதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து கஞ்சி கலயத்தை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். வழி நெடுவிலும் பக்தர்கள் ஓம் சக்தி என கோஷமிட்டபடியும் , பெண்கள் சுவாமி அருள் வந்து ஆடியும் பேரணியாக சென்றனர். தொடர்ந்து வழிபாட்டு மன்றத்தை அடைந்து அங்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். ஆதிபராசக்தி மன்றம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.

















