கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடாத மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடாத மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காமராஜர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். பஸ் நிலையம் அருகில் வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தலைமை தபால் நிலையத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சித்தனர். அப்போது மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தபால் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது
கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிடவேண்டும். தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கையை திருத்தம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். . தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Exit mobile version