எஸ் ஆர் எம் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மாணவர்கள் அறிவியல் சார்ந்த திறமையை மேம்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும் மகாராஷ்டிரா ஆளுநர் ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன்* உரை
SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 21வது பட்டமளிப்பு விழா – ஞாயிற்றுக்கிழமை இன்று காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள டாக்டர் டி.பி. கணேசன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது இந்த 21 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக
மகாராஷ்டிர ஆளுநர் ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்.
மாணவர்கள் அறிவியல் சார்ந்த திறமைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் மொழி பொறுத்தவரை ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பயின்ற சுமார் 800 மாணவர்களும் மற்ற பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கும் மகாராஷ்டிரா ஆளுநர் ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன்* அவர்கள் கல்வி சான்றிதங்களை வழங்கினார்.
மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில்
எஸ் ஆர் எம் பல்கலைக்கழக நிறுவனர் . பாரிவேந்தர்
மற்றும் ரவிச்சந்திரன்.
டாக்டர் வி. நாராயணன் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினார்கள்.