கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 35 மற்றும் 36 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மேயர் மகேஷ், ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் தமிழ்நாடு உணவு கழக தலைவர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டு மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொடுக்க உத்தரவிட்டனர்.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு அலுவலகங்களுக்கு சென்று மனு கொடுத்து காத்திருக்க வேண்டிய நிலையை மாற்றி பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு அனைத்து அதிகாரிகளும் துறை அலுவலர்களுடன் வந்து மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து 10,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் 35 மற்றும் 36 வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் வைத்தியநாதபுரம் தேவி முத்தாரம்மன் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டான்லின்” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு திட்ட முகாமில் மேயர் மகேஷ், ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா, தமிழ்நாடு உணவுக் கழக தலைவர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டு, பொதுமக்களிடத்தில் குறைகள் கேட்டறிந்து தேவையான உதவிகளை செய்து தரும்படி அதிகாரியிடம் கேட்டுக் கொண்டனர். முகாமில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் விவசாயிகளுக்கு விதைப்பயிர், மின்சார மின் இணைப்பு, ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் உடனுக்குடன் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. வருவாய் மருத்துவம் விவசாயம் உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

