மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிதியுதவியை மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கி ஆறுதல்:-
மயிலாடுதுறை பட்டமங்கல ஆராயத் தெருவைச் சேர்ந்த அருண்சங்கர்(22), சீர்காழி கொண்டல் குடியானத் தெருவைச் சேர்ந்த சிபிராஜ்(21) ஆகிய இளைஞர்கள் இருவரும் ஜூலை 20-ஆம் தேதி சீர்காழி அகரஎலத்தூர் பனங்காட்டங்குடி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் ரூ.3 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், பட்டமங்கல ஆராயத்தெருவில் வசிக்கும் அருண்சங்கரின் பெற்றோரை நேரில் சந்தித்து வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, நகராட்சித் தலைவர் செல்வராஜ், வட்டாட்சியர் சுகுமாறன், தனி வட்டாட்சியர் விஜயராகவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று மூன்று லட்ச ரூபாய் காசோலை அவர் குடும்பத்தினருக்கு வழங்கினார்.இதில் சீர்காழி வட்டாட்சியர் அருள் ஜோதி, சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் ஹரிஹரன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
