ஆணவ கொலைகென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மென்பொறியாளாளர் கவின் நிவினேஷை படுகொலை செய்ததை கண்டித்து ஆணவ கொலைகென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் புரட்சி பாரத கட்சி சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய ஆணவ படுகொலை செய்யப்பட்ட மென் பொறியாளர் கவின் விக்னேஷ் அவர்களை ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஆணவ படுகொலைக்கென தனி சட்டம் இயற்றாத தமிழக அரசை கண்டித்தும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் நகராட்சி மைதானத்தில மாவட்டத் தலைவர் திலீபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பரணி மாரி ஜான்சன் ஆம்ஸ்ட்ராங் பூவை,ஆறுமுகம் தமிழரசன் திருமுருகன் கோபிநாத் ஜெய் பீம் கமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் அப்போது தமிழக அரசை கண்டித்து ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்

Exit mobile version