சொந்த வீடற்றோர்க்கு 3 சென்ட் வீட்டு மனை, வீடு நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கிட வலியுறுத்தியும் விவசாயத்தை அழிக்க வரும் கார்ப்பரேட் மின் திட்டங்களை தடை செய்யக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:-
சொந்த வீடற்றோர்க்கு 3 சென்ட் வீட்டு மனை, வீடு நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வாயிலில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளே வந்து வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும் ஒரு நாளைக்கு ரூபாய் 600 கூலியாக உயர்த்த வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருப்பதால் விவசாயத்தை அழிக்க வரும் அனைத்து கார்ப்பரேட் மின் திட்டங்களை தடை செய்ய வேண்டும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களை வசப்படுத்தி வரும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிலங்களை கைப்பற்றி நிலம் வழங்கிய சிறுகுரு விவசாயிகளுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து செல்வோம் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலை அடைத்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

