ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும், தந்தையர் தினத்தில் ராமதாஸுக்கு வாழ்த்துகள் எனவும், தம் மீது கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் எனவும் திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசினார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்துள்ள நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸும், திருவள்ளூரில் அன்புமணி ராமதாஸும் தனித்தனியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், தமது தந்தையான ராமதாஸ் மன நிம்மதியுடன் நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியுடன் 100 ஆண்டுக்குள் மேல் வாழ வேண்டும் எனவும், மகனாக தம்முடைய கடமை எனவும், தமது தந்தையான ராமதாஸுக்கும் உலகத்தில் உள்ள அனைத்து தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார், என் மீது கோபம் இருந்தால் தந்தையான ராமதாஸ் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் தந்தையிடம் மன்னிப்பு கேட்பது பெரிதல்ல என்றார். 10 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்திருப்பதால் உங்களுக்கு சுகர் டிபி இருப்பதால் அதிகமாக டென்ஷன் ஆகாமல் இருக்க வேண்டுமென அறிவுரைத்துள்ளார் நீங்கள் சொல்வதை மகனாக கட்சியின் தலைவனாக செய்து காட்டுகிறேன் என தெரிவித்தார் தன் மீது வருத்தப்படவோ கவலைப்பட கோபப்படவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டார் 45 ஆண்டுகளாக நீங்கள் வளர்த்த கட்சியை உங்கள் கனவுகளை நினைவாக்குவேன் என்றார் தேசிய தலைவரான நீங்கள் இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ் என மோடியை சொல்லி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் நடைபெற்று வரும் மோதல் நீண்ட நாட்களாக நீடித்து வரும் நிலையில் அன்புமணி தனது தந்தையிடம் மாவட்ட பொதுக்குழு மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருப்பது பாமக கட்சி தொண்டர்களை மகிழ்ச்சிடைய செய்துள்ளது, மேலும், பேசிய அவர், பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆகியுள்ளன.சமூகநீதி போராளி ராமதாஸ் வழிநடத்தி வருகிறார் எனவும், கட்சி தொடங்கிய நோக்கமே ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்பதே எனவும், வன்னியர் சங்கத்தை தொடங்கி பல போராட்டங்களை ராமதாஸ் நடத்தியும் பலன் கிடைக்கவில்லை, சமூக நீதி வேண்டும் என பாமகவை ராமதாஸ் தொடங்கினார் எனவும், சமூக நீதிக்கு துரோகி திமுக எனவும், சமூக நீதி பற்றி பேச ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை எனவும், பெரியார், அண்ணா வாரிசு என வீண் பேச்சு, வசனம் பேசுகின்றனர் எனவும், திமுகவால் எதுவும் செய்ய முடியாது, இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு கேட்டும் இதுவரை செய்யவில்லை எனவும், பொதுக்குழு உறுப்பினர்கள் மக்களை சந்தித்து மிகப்பெரிய பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும், புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், சமூக நீதி மாநாடு நடத்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினோம் எனவும்,கிரிமிலேயரை அடக்க வேண்டும், மதுவை அழிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தியதாகவும், 2026-இல் பாமக அங்கம் உள்ள கூட்டணி ஆட்சி அமையும் எனவும், நாமும் ஆள வேண்டும், 2004-இல் ஆட்சியில் அங்கமாக இருந்த போது, கல்வியில் 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து அது ஏற்கப்பட்டது.இல்லையேல் கூட்டணி விட்டு வெளியேறுவோம் என ராமதாஸ் கூறிய உடன் மாலையில் சோனியா அறிவித்தார்
எனவும், சமூக நீதி என்றால். என்னவென்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை எனவும், தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாமக எனவும், ஜூலை 25-இல் தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் 100 நாட்கள் தொடங்கப்பட உள்ளது எனவும்,10 கோரிக்கைகளை வலியுறுத்தி ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25-இல் நடைபயணம் தொடங்க உள்ளதாகவும், பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு எனவும், திமுக ஆட்சியின் கவுன்டவுன் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது எனவும்,கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை விடப்போவதில்லை எனவும், 1700 ஏக்கர் நிலத்தில்அறிவுசார் நகரம் அமைக்க விடமாட்டோம் எனவும், அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளனர் எனவும், திருவள்ளூருக்கு மாற்றாக தரிசு நிலம் அதிகம் உள்ள திருவண்ணாமலைக்கு மாற்றங்கள் எனவும், சிப்காட்டு நிலம் எடுத்து முதலாளிகளுக்கு கொடுக்கன்றனர் எனவும்,கும்மிடிப்பூண்டியில் சுற்றுச்சூழல் மாசு உள்ளது எனவும், அண்ணா பல்கலைக்கழகம் பொள்ளாச்சியில் வன்கொடுமை நடந்துள்ளது எனவும், உரிமைகளை கேட்பதற்காவே நடைபயணம் எனவும், திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து நிலங்களையும் பிடிங்கி விட்டனர்.வேலைவாய்ப்பு இல்லை எனவும்,6 லட்சம் வேலை உருக்குவோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக ஒரு வேலை வாய்ப்பு கூட உருவாக்கவில்லை எனவும், பாமக ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் இருக்காது எனவும், மது, போதைப்பொருட்களை விற்பதே திமுக தான் எனவும், மது விற்பனையில் 45000 கோடி தான் வருமானம் என அமைச்சர் கூறுகிறார்,
டார்கெட் வைக்கின்றனர் எனவும், அமலாக்கத்துறை சோதனைக்காக அலறி அடித்து ஓடுகின்றனர் எனவும், தமிழக அரசுக்கு ஓராண்டுக்கு கணக்கில் வருவது மட்டும் 27 கோடி வருமானம் எனவும், 45 குவாரிகளில் 27 கோடி என்பதை நம்ப முடியாது எனவும், 55% மக்கள் நகரத்தை நோக்கி சென்றுள்ளனர்எனவும், கும்மிடிப்பூண்டி பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது எனவும், தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் செல்ல உள்ளதாகவும், லோகோ, நிகழ்ச்சி குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரும் எனவும், அத்திக்கடவு, காவேரி என பல்வேறு நடைபயணங்கள் மேற்கொண்டதாகவும், எந்த கட்சியோ, எந்த அமைப்போ இவற்றை செய்யாது எனவும்,கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவது கூட தமிழக அரசுக்கு தெரியாது எனவும், நாம் ஆள வேண்டும் என ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும் எனவும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வைப்போம் எனவும்,8 மாதங்களில் தமிழக அரசு வீட்டுக்கு சென்று விடும் எனவும், முதல்வர் கையில் சட்டம் ஒழுங்கு உள்ளது எனவும், பாமக நிர்வாகி துப்பாக்கியால் கொலை செய்யப்பட்டார் எனவும், முதல்வரின் மெத்தனம் தான் காரணம் எனவும்,முதல்வருக்கு நேரம் இல்லை எனில் வேறு யாருக்காவது சட்டம் ஒழுங்கு துறையை கொடுங்கள் எனவும், தமிழ்நாட்டில் கேவலமான ஆட்சி நடக்கிறது.ஆட்சியை அகற்ற நேரம் வந்து விட்டது எனவும் இன்று முதல் கவுன் டவுன் ஸ்டார்ட்டாகி விட்டது எனவும் பேசினார்.