முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

மயிலாடுதுறையில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்:- புவிவெப்பமயமாதல் மற்றும் அழிந்துவரும் மரவகைகளை பாதுகாக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் நினைவு தினத்தை மயிலாடுதுறையில் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து ஜோதி பவுன்டேஷன் தனியார் அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா குத்தாலம் தாலுக்கா கபூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. அறக்கட்டளையின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் முத்துக்கனியன், உதவி திட்ட அலுவலர் திருஞானசம்பந்தம், சுற்றுச்சூழல் இயக்குனர் காமராஜர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, புவிவெப்பமயமாதல் மற்றும் அழிந்துவரும் மரவகைகளை பாதுகாக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் அரியவகை மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அரசு அறிவித்த வாட்டர் பெல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாணவர்களுக்கு தண்ணீர் பெட் பாட்டில் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் பதாகைகள் ஏந்தி இயற்கையை காக்கும் விதத்தில் புவி வெப்பமாயதலை தடுப்போம், மரம் வளர்ப்போம், நீர் நிலைகளை பாதுகாப்போம், மாசற்ற பூமியை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அறக்கட்டளை நிறுவனர் ஜோதிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version