மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருந்தாளுனர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 700 -க்கு மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்துடன் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருந்தாளுனர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருந்தாளுனர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 700 க்கு மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்துடன் நிரப்ப வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை உரிய வெப்ப நிலையில் பராமரிக்க குளிர் பதன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், 46 மாவட்ட சுகாதார அலுவலகம், மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version