மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியின் ஆங்கிலத்துறை நடத்தும் ஆங்கில இலக்கிய மன்றத்தின் சார்பில், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப்போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் எஸ். சந்திரசேகரன், இணைப் பேராசிரியர் டாக்டர் எம். வெங்கடேசன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம். கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக, மயிலாடுதுறை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் டி. லீலாவதி, குட் ஷெப்பர்ட் பள்ளித் தாளாளர் ஜி. சாலமன் தேவராஜ் மற்றும் பேராசிரியர் ஆர். மல்லிகா ஆகியோர் பங்கேற்று, நடுவர்களாக செயல்பட்டனர்.
போட்டியில் தேசபக்தி, பக்தி, கர்நாடக இசை மற்றும் ஆங்கிலப் பாடல்கள் ஆகியவற்றில் மாணவர்கள் அனைவரையும் ஈர்க்கும் பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர். பாடல்கள் அனைத்தும் பாடத்திட்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றியாளர்கள் விபரம்
தனிப் பாடல்பிரிவில்:
முதலிடம்: ஜெ. ஜோன்ஸ் ரோஹித் (மூன்றாம் ஆண்டு ஆங்கிலம்)
இரண்டாம் இடம்: தியாகு (முதலாம் ஆண்டு ஆங்கிலம்)
மூன்றாம் இடம்: ஜோயல் ஜோசப் (மூன்றாம் ஆண்டு மாலை நேர ஆங்கிலம்)
குழுப் பாடல் பிரிவில்:
முதலிடம்: ஐயப்பன் மற்றும் குழு (மூன்றாம் ஆண்டு மாலை நேர பிரிவு ஆங்கிலம்)
இரண்டாம் இடம்: விஷ்ணு பிரியா மற்றும் குழு (இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கிலம்)
மூன்றாம் இடம்: தரணி பாவனா மற்றும் குழு (இரண்டாம் ஆண்டு மாலை நேர பிரிவு ஆங்கிலம்)
ஆறுதல் பரிசு முதலாம் ஆண்டு மாணவர் ஆஸ்லி இஸ்ரவேலுக்கு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழா தொடக்கத்தில் பேராசிரியர் ஏ. கனிமொழி வாழ்த்து செய்திகளை வாசித்தார்.
