பண்ணூரில் டான் பாஸ்கோ யூத் சென்டர் சார்பில் டர்ஃப் மைதானம் கைப்பந்து மைதானம் திறப்பு விழா 

கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூரில் டான் பாஸ்கோ யூத் சென்டர் சார்பில் டர்ஃப் மைதானம், கைப்பந்து மைதானம், கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்ததுடன் கால்பந்து போட்டியை உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கே.ரமேஷ் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூரில் டான் பாஸ்கோ யூத் சென்டர் சார்பில் டர்ஃப் மைதானம், கைப்பந்து மைதானம், கிரிக்கெட் மைதானம் திறப்பு மற்றும் தொடக்க விழா, அடிக்கல் நாட்டி, கால்பந்து போட்டியையும் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கே. ரமேஷ் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப் பொருட்களால் இளைஞர்கள் சீரழிவதை கட்டுப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கைப்பந்து கால்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சி அளித்து போட்டியும் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ரூ 38 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கே.ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் திருமங்கலம் தலைவர் கே. நரேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கால்பந்து போட்டியையும் தொடங்கி வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி ஊராட்சி மன்ற தலைவர் கே.ரமேஷ் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளையும் நட்டு வைத்து மரக்கன்று நடுவதன அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

Exit mobile version